முதல்வர் வேட்பாளராக எடப்பாடி! தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!

சற்றுமுன் மதுரை
admk-caders
admk-caders

பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடிய அதிமுகவினர்!

மதுரை: அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதற்கு மதுரையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளர் மற்றும் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் பொருளாளர் ராஜா மற்றும் துணைச்செயலாளர் தங்கம் ஆகியோரின் தலைமையிலான கட்சி பிரமுகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சோழவந்தான் வாடிப்பட்டியில் அ.தி.மு.கவினர்
கொண்டாட்டம்.

madurai-admk-cadrs
madurai-admk-cadrs

தேர்தல்வழிகாட்டு குழுவில் சோழவந்தான் தொகுதி எம்.எல். ஏ. மாணிக்கம் அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து வாடிப்பட்டி, சோழவந்தானில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் போட்டியிடுவார் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாகவும், கட்சியின் தேர்தல் வழிகாட்டு குழுவில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள மாணிக்கம் அவர்களை அறிவித்ததை தொடர்ந்து சோழவந்தான் அஇஅதிமுக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர், இதில் துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பி நன்றி தெரிவித்தனர்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.