
கன்னியாகுமரி மாவட்டம் ஏற்றக்கோடு ஊராட்சியில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வரும் பணியாளர்களை மதமாற்ற முயற்சிப்பதாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப் பட்டுள்ளது. தினம்தோறும் காலை ஜெபம் செய்ய கட்டாயப் படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் சமூகத் தளங்களில் வைரலாகிவருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் ஏற்றக்கோடு ஊராட்சியில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களை ஊராட்சி மன்றத் தலைவி ஹெப்சிபாய் ஒருவழியாக்கி விடுகிறார். ஜாதி மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வேலை செய்து வருபவர்களை, தினந்தோறும் காலை வேளையில், வேலை துவங்கும் முன் அனைவரையும் கட்டாயப் படுத்தி பெந்தேகோஸ்தே ஜெபம் செய்ய வைக்கிறார்.
இது குறித்த வீடியோ காட்சிகளுடன் திருவட்டார் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டம் ஏற்றக்கோடு ஊராட்சியில் மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வரும் பணியாட்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவி திருமதி ஹெப்சிபாய் அவர்கள் ஜாதி மத இன வேறுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக பணியாற்றிவரும் பணியாளர்களிடையே மத துவேசத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மோதலை உருவாக்கும் விதமாகவும் தினமும் காலையில் வேலை துவங்கும் வேளையில் கிறிஸ்தவ மத பிரசாரத்துடன் தான் தொடங்குகிறது
இது ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஹெப்சிபாய் மற்றும் அவரது கணவர் திரு ரூஸ் அவர்கள்தான் இந்த மதமாற்ற வேலையை செய்கிறார்கள். அரசு மக்களின் நலனுக்காக அமைத்த இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தில் பயன்படுத்தி கட்டாய கிறிஸ்தவ மதமாற்றம் செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இதற்கு மூளையாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவியின் கணவன் ரூஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அரசு நடத்தும் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மதமாற்ற முயற்சி மேற்கொள்ளப் படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.