5வது நாளாக தொடரும்… வருமான வரி சோதனை!

சற்றுமுன்
ஜெயா டிவி அலுவலகம், விவேக் வீடு, கிருஷ்ணபிரியா வீடு உள்ளிட்ட இடங்களில், கடந்த நான்கு நாட்களாக, 'ரெய்டு' நடந்து வந்தது. இந்நிலையில் பல இடங்களில் 5வது நாளாக இன்றும் ரெய்டு தொடர்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான, மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5வது நாளாக இன்றும் தங்கள் சோதனையை தொடர்கின்றனர்.

கோடநாட்டிலுள்ள கர்சன் எஸ்டேட் உள்ளிட்ட பல இடங்களிலும் 5வது நாளாக இன்று சோதனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.