ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் 4 பேர்களை இலங்கை கடற்படை தாக்கியது

சற்றுமுன் தமிழகம்
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே நேற்று காலை ஜெகதாப்பட்டிணத்தில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை நேற்றிரவு  இலங்கை கடற்படையினர் தாக்கியதால் நேற்றிரவு  மணமேல்குடி அரசு மருத்துவமனையில்  சேர்ந்து எடுத்துகொண்டனர்.
அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து இன்று காலை 180க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர் இவர்கள் அனைவரும் கடலில் 22 நாட்டிகல் தூரத்தில் மீன்பிடித்தபோது அப்பகுதிக்கு ரோந்துக்கு வந்த இலங்கை கடற்படையி;னர் ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் சுற்றிவளைத்தனர் அப்போது  சத்தியராஜ்(29) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற சத்தியராஜ்(29) பாலமுருகன்(30) அருண்குமார்(19) சவுந்திரராஜன்(26)நாகரத்தினம்(40) அன்பரசன்(26) ஆகிய 6 பேர்களையும் தாக்கியுள்ளனர்.இதில் அருண்குமார் சவுந்திரராஜன்,நாகரத்தினம் அன்பரசன் ஆகிய 4 பேர்களும் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.