கிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க!

Published:

madurai collector vinay

கிஸான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் அக்.31க்குள் பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் அரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிஸான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் திரும்ப செலுத்தாவிட்டால் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை:

  • கிஷான் திட்டத்தில் 12,919 நபர்கள் முறைகேடாக பணத்தை பெற்று உள்ளனர்
  • இதுவரை 7,413 நபர்களிடம் இருந்து 2 கோடியே 71 இலட்சம் பணம் திரும்ப பெறப்பட்டது
  • இன்னும் 5,506 நபர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற வேண்டியுள்ளது
  • அக் 31 ஆம் தேதிக்குள் பணத்தை செலுத்தா விட்டால் அரசின் அனைத்து சலுகைகள் ரத்து செய்யப்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும். – இவ்வாறு ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Related articles

Recent articles

spot_img