புது தில்லி: வரும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் பாஜக., தேசிய செயற்குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் நடைபெறுகிறது. முன்னதாக இந்தக் கூட்டம் கடந்த வாரம் திட்டமிடப் பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு காரணமாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த செயற்குழுக் கூட்டத்தில், வரவிருக்கும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் பாஜக.,வின் செயல்பாடுகள் உள்ளிட்டவை விவாதிக்கப்படும். மேலும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சரியான வகையில் பிரசாரம் செய்வது, எதிர்க் கட்சியினரின் பிரசாரங்களுக்கு பதில் கொடுப்பது, காங்கிரஸ் அமைக்கவுள்ள எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை முறியடிப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப் படும் எனத் தெரிகிறது.




