மதுரையில் அதிகாலை முதலே பலத்த மழை!

Published:

rain-in-madurai
rain-in-madurai

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலே முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் மட்டுமில்லாமல், அருகில் உள்ள மாவட்டங்களிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

மதுரையில் அண்ணாநகர், வண்டியூர், கருப்பாயூரணி, உத்தங்குடி, வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், ஒத்தக்கடை, வீரபஞ்சான், வரிச்சூர், களிமங்கலம், பரவை, விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

rain-in-madurai1
rain-in-madurai1

மதுரை உயர் நீதிமன்ற கிளை பகுதியில் மழை அடித்து பெய்ய துவங்கி உள்ளது. இன்று காலை 7 மணி யளிவில் மதுரையில் பலத்த மழை பெய்ய துவங்கியது.

madurai-rain
madurai-rain

விருதுநகரில் காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img