டூவீலரில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த இருவர் கைது!

அடடே... அப்படியா? கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
drug-madurai-police-captured
drug-madurai-police-captured

இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது, 119 கிலோ புகையிலை பறிமுதல்!

மதுரை மாவட்டம். திருமங்கலம் நகர் காவல் நிலைய சரகத்தில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருசக்கர வாகனத்தில் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில்,.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுஜித் குமார் உத்தரவின் பேரில், தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து வந்த மாம்சபுரத்தை சேர்ந்த, அமானுல்லா முகைதீன் பிச்சை (62) விருதுநகர், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விமல் (35) என்பவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 119 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த இருவர் மீதும் திருமங்கலம் நகர் போலீசார், வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.