66 வயதினிலே… ரஜினியும் கமலும் இணைந்தால் ஹிட் தான்! ஜெயக்குமார் கல கல!

Published:

jayakumar - 2026

அரசு முறைப் பயணமாக இன்று சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அப்போது, ரஜினி – கமல் இணைவார்கள் என்ற பேச்சு எழுகிறது என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் எந்த பாதிப்பும் இல்லை;

16 vayathinele - 2026

அதேசமயம் ரஜினி – கமல் இணைந்தால் 16 வயதினிலே மாதிரி ஒரு நல்ல படம் கிடைக்கலாம் என கிண்டலுடன் தெரிவித்தார்.

சமீபத்தில், பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். அதற்கு ஆதரவாக கமல்ஹாசன் டுவிட்டரில் பாராட்டிப் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img