மழை… மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் விற்பனை மந்தம்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல் வணிகம்
malli-poo
malli-poo

மழை காரணமாக இன்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மந்தம்: பூக்கள் விலை சரிவு….

மதுரை மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர் கனமழை காரணமாக மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை கடுமையான விலை சரிவு ஏற்பட்டுள்ளது

கடும் மழை காரணமாக மக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்கள் வாங்க வராத காரணத்தினால் பூக்கள் தேங்கியுள்ள காரணத்தினாலும் பூக்கள் விலை கடுமையான விலை சரிவு ஏற்பட்டுள்ளது

இன்றைய பூ விலை நிலவரங்கள்
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால்
மல்லிகைப் பூவின் விலை கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும்
செவ்வந்தி பூ விலை கிலோ 50 ரூபாய்
அரளி பூவின் விலை 50
முல்லைப் பூவின் விலை கிலோ 200 ரூபாய்
பிச்சி பூவின் விலை 150 ரூபாய்
சம்பங்கி பூவின் விலை 40 ரூபாய்
ஒரு கிலோ துளசியின் விலை 40 ரூபாய்

அனைத்து பூக்களின் விலையும் கணிசமாக விலை குறைந்துள்ளது மக்கள் நடமாட்டம் கணிசமாக குறைந்ததால் பூக்கள் விற்பனை மந்தமாகவே நடந்து வருவதாக மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.