நானும் நர்ஸ் தான், போராட்டத்திற்குச் சென்ற பிக்பாஸ் ஜூலியை விரட்டியடித்தது காவல்துறை.
நானும் நர்ஸ் தான் என்றும் செவிலியர்கள் போராட்டத்திற்கு தன்னை அனுமதிக்குமாறு கூறிய பிக்பாஸ் ஜூலிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இன்று சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்திற்கு வந்து தன்னை செவிலியர்கள் போராட்டத்திற்கு அனுமதிக்குமாறு காவல்துறயினரிடம் ஜூலி வாக்குவாதத்தில் ஈடுப்ட்டார், ஆனால் அவருக்கு அனுமதி வழங்க காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
பின்னர் இது தொடர்பாக பேசிய அவர், சாதாரண கூலி வேலை செய்பவர்களை விட ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் செவிலியர்கள் குறைவாக சம்பளம் வாங்குகிறார்கள். ஒரு சராசரி மனிதனுக்கு இந்த ஊதியம் மிகவும் குறைவு என்று தெரிவித்தார்.



