மதுரையில் வெளுத்து வாங்கும் மழை! பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சற்றுமுன் மதுரை
rain-in-madurai-1
rain-in-madurai-1

மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.

தீபாவளிக்கு முதல் நாள் தொடங்கி தற்போது இன்று வரை மதுரையில் மழை வெளுத்து வாங்குகிறது. இன்று காலையில் தொடங்கிய மழையினால் மதுரை பெரியார் பஸ்டாண்ட். வடக்கு மாசி உள் பட 4 மாசி வீதி தாழ் வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி ஆறாக காட்சியளிக்கிறது

சாலைகளிலும் பெருக்கெடுத்து தண்ணீர் செல்வ தாலலும்தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமித்துக்குள்ளானர்கள். மேலும் வாகனங்களில் தண்ணீர் புகுந்து வண்டி இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தியுள்ளனர்

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக மேலும் சில நாட்கள் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.