9 மாவட்டங்களில் கன மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published:

rain-in-chennai
rain-in-chennai

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், அடுத்த இரு தினங்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வடதமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் அது தகவல் வெளியிட்டுள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainyseason
rainyseason

அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

Related articles

Recent articles

spot_img