
வழிபாட்டில் துளசி துளசி பெயர்களை நான்கு பெயர்களால் குறிக்கப்படுகிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக பழைய பெயர் இது.
அப்போதும் இப்போதும் துளசியை குறிக்க இது பயன்படுகிறது தண்ணந் துழாய் தன் துழாய் திருத்துழாய் நறுந்துழாய் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுகின்றனர்
பழங்காலத்தில் துழாய் விஷ்ணுக்கு உரியதாக விதிக்கப்பட்டது பழைய பாடல்களில் துழாய் மாலை என்ற பெயர்கள் விஷ்ணுவை குறித்தனர்
கொன்றையும் கலந்து தொடுத்த மாலை அவருக்கு சூட்டப்பட்டது துளவம் பெயர் வழக்கில் இருந்தது இப்பொழுது இல்லை என்ற பெயர்கள் சங்கப் பாடல்களிலும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலும் காணப்படுகின்றன
வட சொல்லின் தமிழ் வடிவம் துளசி இது சங்கப் பாடல்களிலும் இல்லை பிரபந்தத்திலும் இல்லை காலப்பெயர் காலப்போக்கில் இப்பெயர் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் பயில தொடங்கி நிலைபெற்றது துளபம் முதலிய சொற்கள் செயல் செல்வாக்கு இழந்தன
துள -ஒப்பு சி -இல்லாதது துளசி ஒப்பில்லாத ஒப்பற்ற அழகையும் மருத்துவப் பயன்களையும் கொண்டது வடமொழியில் துளசியை குறிக்கின்ற பெயர்கள் அதன் குணங்களையும் சுற்றுகின்றது
விஷ்ணு வல்லபா -விஷ்ணுவுக்கு பிரியமானது கிருஷ்ணதேவி தா கிருஷ்ணன் வாழ்வது பற்றி பல நிலைகளை கொண்டது வகை மஞ்சரி பல மலர் கொத்துக்களை கொண்டது நல்ல சாற்றை கொண்டது சூலை நோயை சுட்டெரிப்பது அதே ராட்சஷி நோய் கிருமிகளால் தோன்றுகின்ற துன்பங்களை நீக்குவது பாவனி புனிதத்தன்மை உருவாக்குவது எளிதில் கிடைப்பது கிராமியா கிராமங்களில் கிடைப்பது பிருந்தா பிருந்தா விஷ்வ துளசி பவானி நந்தினி உடனே முதலிய பல பெயர்களும் துளசிக்கு உரியன
குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது தாமோதரன் ஸ்ரீதரன் முதலிய நாராயணனின் பெயரையே சூட்ட வேண்டும் என்று அருள் ஆணை இடுகிறார் பெரியாழ்வார். துளசி என்பது புனிதமான ஒரு செடியின் பெயர். இதுவே துளசி அம்மனை குறிக்கின்றது தெய்வ பெயரை துளசி துளசி ராம் துளசிங்கம் என்றெல்லாம் பெயர் வைத்து மகிழ்கின்றனர் இந்தியில் ராமாயணத்தை இயற்றியவர் துளசிதாசர்

மக்கள் சூடுகின்ற மலர்களில் செந்தாமரை ரோஜா மல்லிகை முதலிய மலர்களின் பெயர்கள் உண்டு ஆனால் செடியின் பெயர் துளசி ஒன்றுதான் துளசி வகைகள் காட்டில் கிடைப்பன கிராமத்தில் கிடைப்பன என இரண்டு வகைப்படும்
காட்டுத்துளசி பூ துளசி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது கிராமத்தில் நல்ல துளசி செந்துளசி சிவ துளசி கருந்துளசி கிருஷ்ண துளசி கருந்துளசி சிவ துளசி பெருந்துளசி நிலத் துளசி கல் துளசி முள் துளசி துளசி வில்வம் துளசி முதலியன துளசி வகைகளை பற்றி மேலும் விளக்கப்படுகிறது ஆயுர்வேத மருத்துவம் யுனானி மருத்துவம் போன்றவற்றில் பயன்படுகிறது
துளசியின் மருத்துவ குணங்கள் கற்பூர வாசனை உடையது கார்ப்பு சுவை கசப்பு சுவை வெப்ப வீரியம் வெப்பம் உண்டாக்கி கோழையை அகற்றி வியர்வையைப் பெருக்கும் கபம் இருமல் காய்ச்சல் அஜீரணம் பித்தம் இறப்பு வீக்கம் முதலிய நோய்களுக்கு அரிய மருந்து துளசியை தழுவி வருகின்ற காற்று உடலுக்கு நன்மை தரும் நோய்களை அகற்றும் துளசியின் வாசனையால் விஷ பூச்சிகள் வருவதில்லை வீட்டு முற்றத்தில் துளசி மாடம் கட்டி அதனால் துளசியை போற்றி வளர்த்தனர்.
துளசி இலைகள் துளசி தீர்த்தமும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை இவற்றை தினமும் உண்டு பருகி வந்தால் நோய்கள் வராது வந்த நோய்களும் தணியும் துளசியின் மருத்துவ பயன்களை பக்தர்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவே விஷ்ணு கோயில்கள் அனைத்திலும் துளசி இலைகளும் துளசி தீர்த்தமும் மகா பிரசாதமாக வழங்கப்படுகின்றன

உள்ள நோய்களையும் உயிர் நோய்களையும் தீர்ப்பவன் விஷ்ணு உடல் நோய்களை தீர்ப்பது துளசி வேதத்தில் துளசியின் மருத்துவ குணங்கள் சிறப்பித்துக் கூறுகிறப்படுகிறது தோல் மாமிசம் எலும்பு ஆகியவற்றில் படர்ந்த கொடுமையான நோய்களை கிருஷ்ணதுளசி நீக்கும்.
உடலுக்கும் நல்ல நிறம் தரும் தொடர்ந்து பயன்படுத்தினால் பல நோய்கள் தீரும் ஆகவே துளசி மிகவும் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது வேதகால பழமையும் பெருமையும் உடையது துளசி தெய்வீக மூலிகையாகப் திகழ்கின்றது.
தேவி பாகவதம் முதலிய பல புராணங்களில் துளசியின் வரலாறு பலவாறாக வழங்குகின்றது வரலாறு எதுவாக இருந்தாலும் துளசி அம்மனின் விஷ்ணு பக்தியும் தெய்வீக கற்பும் அவளது சிறந்த பண்புகளாக பாராட்டப்படுகின்றன
பாத்ம புராணத்தில் துளசியின் வரலாறு: ஜலந்திரன் கொடுமையான இவன் எல்லோருக்கும் இடையூறு செய்து வந்தால் இவனை வெல்ல யாராலும் முடியவில்லை மனைவி பிருந்தா மேன்மையான கற்புடையவள் விஷ்ணுவின் மீது மாறாத பக்தி கொண்டவள். ஒப்பற்றவள்

விஷ்ணு ஜலந்திரனை வதைத்து விட்டு பிருந்தாவுக்கு பரகதி அளித்து வாழ்த்தினார் துளசி ஒரு புனித செடியாக மாறினால் நெல்லிமரம் ஆகி துளசியை விஷ்ணு மணந்தார் அந்த நாள் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ துவாதசி
கிருஷ்ணர் துளசி மாலைகளை மார்பிலும் கழுத்திலும் புனைந்தார் ஆகவே இவருக்கு வனமாலி என்ற பெயர் வந்தது துளசி விஷ்ணுவுக்கு உரியதாயிற்று விஷ்ணுவுடன் துளசி மாலை துளசி இலை துளசி இலை அல்லது காம்பு துளசி வேர் துளசி அடி ஆகியவை நெருக்கமான தொடர்புடையது
இதை நம்மாழ்வாரும் பாசுரத்தில் கூறுகிறார் குளிர் நீர் குளிர்ச்சி ஆகவே விஷ்ணு கோயில் பிரசாதம் துளசி தீர்த்தம் குளிர்ச்சியைத் தருகின்ற ஆற்றலை உடைய மற்றொரு பிரசாதம் துளசி இலைகள்.
துளசியை வீடுகளில் வழிபடுகின்றோம் கோயில்களில் வழிபடுகின்றோம் பயன்படுத்துகிறோம் துளசி மாடம் அமைத்து துளசிச் செடியை நட்டு தண்ணீர் வார்த்து வளர்த்து வணங்கி வழிபட வேண்டும். இது முழுக்க முழுக்க மகளிர் வழிபாட்டு முறை.
காலையும் மாலையும் செவ்வாய்க் கிழமை வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது நல்லது ஆடவரும் வழிபடலாம் மகளிர் வைகைக் கரையில் நீராடி துளசி மாடத்தை தூய்மைப்படுத்தி சாணம் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி சந்தனம் மஞ்சள் பூசி குங்கும திலகம் இட்டு துளசி பூச்சூட்டி தேங்காய் பழம் உடைத்து பூக்களால் அர்ச்சித்து தூப தீபம் காட்டி பஞ்சாங்க நமஸ்காரம் செய்வது வழிபாட்டு முறை ஆகும்.
துளசி செடி துளசி அம்மன் ஆவாள் மகாலக்ஷ்மியின் அம்சம் மகாலட்சுமி இருப்பது துளசியிடம் மஹாலட்சுமி வழிபடுவதை போலவே துளசி அம்மனையும் வழிபட்டால் அளவற்ற பயன்களை பெறலாம் துளசி அம்மன் பால் வெண்ணிற முடையவள் விஷ்ணுவின் மனைவி விஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும் மாலையாக திகழ்பவள் தன்னோடு சேர்ந்து பொருள்களை புனிதமாக்கும் தன்மையுடையவள் சமய வேறுபாடு இல்லாமல் அனைவரும் துளசியை வழிபடுகின்றனர்.
துளசி அம்மன் விஷ்ணுவை நினைத்து வழிபட்டால் முடிவில் அவனை கணவனாக அடைந்து அவளை வழிபடுகின்ற கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நிகழும் நல்ல கணவர் வாய்ப்பர். துளசி இலைகளை மாலைகளாகத் தொடுத்து விஷ்ணு கோவிலுக்கு கொடுத்தாலும் திருமணம் நிறைவேறும் துளசி ஹோமமும் செய்யலாம்.
சுமங்கலி பாக்கியம் நிலைக்கும் ஐஸ்வர்யங்கள் பெருகும் இல்லறம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செழிப்பாகவும் விளங்கும் தம்பதிகள் பிரிந்து வாழ்ந்தால் துளசி வழிபாடு செய்தால் இணைவார்கள் மகளிர் துளசி அம்மன் வழிபாட்டை அன்றாடக் கடமையாகக் கொண்டு நிறைவேற்ற வேண்டும்
பெருமாளின் அருளை பெறுவதற்கு எட்டு சாதனங்கள் உள்ளன என்று ஸ்ரீமத்நாராயணியம் கூறுகிறது .கங்கைநீர்,. பகவத்கீதை .துளசி வழிபாடு, கோபி சந்தனம் ,. சாளக்கிராம வழிபாடு, ஏகாதசி விரதம் ,.பகவன் நாம ஸ்மரணை விஷ்ணுவின் அருளை பெற்றுத்தரும் மகிமையுடையது.
புது தாலிக் கயிற்றை துளசி அம்மனுக்கு முன் வைத்து வழிபட்டு தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்று கழுத்தில் அணியவேண்டும். வேண்டியபடி பல பலன்களை தரும் பெரும் துணை துளசி.
விரத நாளான துவாதசி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது துவாதசி என்று பெயர் மேற்குறித்த நாளில் துளசியை கருதி உபவாச விரதமிருந்து மகளிர் வழிபடுகின்றனர் காலை முதல் மாலை வரை விரதம் இருக்கவேண்டும் துளசி தீர்த்தத்தை தவிர வேறு எதையும் பருகக் கூடாது உணவு கூடாது துளசி ஸ்தோத்திரங்கள் லக்ஷ்மி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யவேண்டும்.
துளசி நெல்லி திருமணம்: கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக அவர்களது வீட்டில் துளசிக்கும் நெல்லிக்கும் சேர்த்து சாஸ்திர சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்கின்றனர். நாள் கார்த்திகை சுக்ல பக்ஷ துவாதசி அன்னதானம் செய்கின்றனர் இன்றும் நடைமுறையில் உள்ளது.
துளசி வில்வ வழிபாடு: ஒரு சதுரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு திரிசூல வில்வ இலைகளை நடுவில் ஒரு திரிசூல வில்வ இலையுடன் ஒரு துளசி இலையையும் இணைத்து வழிபடுகின்ற வழிபாட்டு முறை ஒன்று உண்டு.
சதுர அமைப்பு பூஜையில் அமைகின்ற அமைப்பை போன்றது வில்வம் துளசி விஷ்ணு இணைப்பது சங்கரநாராயண வடிவ வழிபாடு சைவ வைணவ சமயங்களின் இணக்கம். விஷ்ணுவும் சிவனின் ஒரு சக்தி இருவரையும் இணைத்து வழிபடுவது. அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு. சைவ சாக்த சமயங்களின் இணக்கம்.
வில்வம் துளசி என்பன முறையே சிவன் விஷ்ணு பரம்பொருளை சுட்டுகின்ற அடையாளக் குறிகள் சிறப்பு வழிபாடு கார்த்திகை பௌர்ணமி துளசி அம்மன் அவதரித்த நாள் அன்று துளசியை சிறப்பாக வழிபடலாம்.
செய்யக்கூடாதவை துளசியை வளர்த்தால் தூய்மையுடன் வளர்த்து வழிபட வேண்டும் இல்லாவிட்டால் வளர்க்கக்கூடாது துளசி இலைகளை அடிக்கடி பறிக்கக்கூடாது உடல் தூய்மை இல்லாதவர் துளசியை தொடவே கூடாது தொட்டால் வாடி வதங்கி விடும்.
துளசி தினமும் வழிபடத் தவறக்கூடாது மகளிர் துளசியை தலையில் சூட மாட்டார்கள் கதம்பமாலை கொடுத்த துளசியை சூடலாம் துளசி அருகே வில்வம் நெல்லி முதலிய புனித மரங்களை வளர்க்கலாம் பிறவற்றை வளர்க்கக்கூடாது
வீட்டு-பூஜை-அறை ஒரு கோயில். இதில் தலமரம் துளசி தெய்வீக மூலிகை இதன் மகிமையை உணர்கின்ற கதைகள் பல. சத்யபாமா கிருஷ்ணன் மீதான மிகுந்த காதலை உடையவள் அதனால் கர்வம் அடைந்திருந்தாள் விஷ்ணு சத்யபாமாவின் கர்வத்தை அடக்க நினைத்தார். நாரதர் அதற்கு துணை புரிந்தார் சத்யபாமாவிடம் சென்ற நாரதர் கிருஷ்ணனின் எடைக்கு எடையான பொன்னை தானம் செய்தால் கிருஷ்ணன் அவர்களை பிரிய மாட்டான் என்று கூறினார்
கிருஷ்ணனும் வந்தார் தராசின் ஒரு தட்டில் அமர்ந்தார் பொன்னையும் மணியையும் குவித்தாள் சத்தியபாமா. தட்டுக்கள் கீழே இறங்கவில்லை ருக்மணி வந்தாள் தராசுத் தட்டுகள் பொற்குவியல் கீழே கொட்ட சொன்னாள் தானே சென்று துளசி இலை ஒன்றைப் பறித்து வந்தாள் கிருஷ்ணனை வணங்கினாள் காலியான தட்டில் துளசி இலையை வைத்தாள்
துளசி இலை தட்டு மட்டுப்பட்டது கிருஷ்ணன் அமர்ந்த தட்டு அருளால் உயர்ந்தது இரண்டு தட்டுகளும் சமமாக நின்றன சத்யபாமாவின் செருக்கும் அடங்கியது பக்தியுடன் சமர்பிக்கப்பட்ட துளசி இறைவனுக்கு சமம் துளசியின் மகிமை உணர்த்தும் அருமையான வரலாறு.
விஷ்ணுவுக்கு அலங்காரம் செய்யவும் அர்ச்சனை செய்யவும் துளசி இலைகளே தேவைப்படுகின்றன பக்தர்களுக்கும் வழங்குகிறோம் விஷ்ணு அலங்காரப் பிரியன் அவனை எத்தனை மலர்களால் அலங்கரித்தாலும் துளசி இலைகளும் மாலைகளும் இருக்கவேண்டும். விருப்பமானது கருந்துளசி மாலை துளசி இலைகளை இந்த காலங்களில் பறிக்கக்கூடாது
காலை மாலை இரவு ஞாயிறு செவ்வாய் வெள்ளி அஷ்டமி துவாதசி சதுர்தசி திருவோணம் மாதப்பிறப்பு அமாவாசை பவுர்ணமி நாட்களில் பறிக்கக்கூடாது
அந்த நாட்களில் பறிப்பது விஷ்ணுவின் தலையை கொள்வதற்கு சமம் புட்ப விதி என்ற பழைய நூல் அந்த நாட்கள் வழிபடத் தகுந்த மேலான நாட்கள் எனக் கூறுகிறது.
இறைவனுக்கு வைத்த பூக்கள் பூமாலைகள் நிர்மால்யம் எனப்படும் இறைவனுக்கு அடுத்த பூஜைக்கு அகற்றிவிட வேண்டும் ஆனால் துளசிக்கு மட்டும் இது பொருந்தாது துளசி இலைகளை ஒரு வருடம் வரையில் தூய்மைப்படுத்தி பயன்படுத்தலாம் துளசி இலைகள் பழையன் ஆனாலும் உலர்ந்து போனாலும் தெய்வீக தன்மை மாறுவதில்லை குணங்கள் குறைவதில்லை

உபவாசம் இருக்கின்றவர்கள் துளசி தீர்த்தத்தை பருகலாம் தண்ணீருக்குப் பதிலாக துளசி தீர்த்தத்தை பருகி வருகின்றனர் துளசி புனிதமானது மருத்துவ குணம் உடையது காப்பு கவசமாக புனைகின்றனர் கங்கை நீருக்கு சமமானது துளசி மணி மாலை என்ற பெயருடைய மாலையினை ஐயப்ப பக்தர்கள் அணிகிறார்கள்.
துளசிமணி மாலை அணிவது விரதத்தின் தொடக்கம் கழட்டுவது விரதத்தின் முடிவு துளசிமணி மாலை பெண்களும் அணியலாம் தெய்வ வழிபாட்டிற்காக துளசிச் செடிகளை வளர்க்கின்றனர் அந்த இடத்திற்கு பிருந்தாவனம் துளசி என்று பெயர் விஷ்ணு கோவிலுக்கு அருகில் அமைவது சிறப்பு துளசி எல்லா இடங்களிலும் வளர்கிறது.
துளசிச் செடிகளை வளர்த்து இலைகளைப் பறித்து மாலையாக தொடுத்து தூக்கி தோளில் சுமந்து கோயிலில் சேர்ப்பது துழாய் திருத்தொண்டு
திருத்தொண்டு செய்தவர்கள் பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார். பெரியாழ்வார் இதனை செய்த காரணத்தால் ஆண்டாளை மகளாக பெற்றார். வன மாலையின் அம்சமாகப் பிறந்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார் கூடையும் பொலிந்து தோன்றிய தொண்டர் அடிப்பொடி என்று விஷ்ணுவிற்கு திருத்துழாய் தொண்டு செய்வதில் பெருமிதம் கொண்டார்
சைவத்தில் துளசி சிவபெருமான் திருமுடியில் துளசியை விரும்பி அணிந்துள்ளார். கிடைத்திருப்பதில் திருநாவுக்கரசர் வர்ணிக்கிறார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்யவேண்டும் ஞாயிற்று கிழமை வில்வ இலை.
திங்கட்கிழமை சோமவார விரதம் துளசியால் அர்ச்சிப்பது சிறந்தது சிவன் பார்வதி எப்படிப் பூஜை செய்வதை விரும்புவாரோ அப்படி துளசியால் பூஜிப்பதை விரும்புகிறார்
துளசி ஈஸ்வரர் என்ற பெயரை குளத்தூரில் எழுந்து அருள்பாலிக்கிறார். துளசீஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலிக்கும் திருக்கோயில் அமைந்த திருத்தலம் குளத்தூர் விக்ரம சோழ அரசன் காலத்தில் சிறப்புற்று விளங்கியது சென்னை செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயில் பல்லவ கோட்டைக்கு செல்லும் வழியில் 6 கிலோ மீட்டரில் உள்ளது
திருக்கச்சூர் வழியாக செல்லும் வழியாகவும் அடையலாம் விஷ்ணு கோயில்கள் பலவற்றில் துளசிதளம் சில கோயில்களில் பிருந்தாவனமும் உண்டு விஷ்ணு கோயிலின் தலமரம் வில்வம் ஸ்ரீமுஷ்ணத்தில் சிவன் கோயிலின் தலமரம் துளசி. உமையம்மை விரும்புவதைப் போல சிவன் துளசியை விரும்புகிறார் விநாயகருக்கு துளசி உகந்ததல்ல அதிர்ஷ்டானத்தை பிருந்தாவனம் என்ற பெயரால் வழங்குகின்றனர்.
துளசி செடி நிறைந்த பயனை தரும் துளசி விஷ்ணுவின் சக்தி அதை வழிபடுவதால் பராசக்தி மகிழ்கிறார் சிவன் திருமுடிமேல் சூடுகிறார். போகத்தை விரும்புவோருக்கு போகத்தையும் மோட்சத்தையும் விரும்போவோருக்கு மோட்சத்தையும் துளசி அருளுகிறாள்.

