விஜயவாடா கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்!

Published:

sahabari devi
sahabari devi

விஜயவாடா இந்திரகீலாத்ரி மலைமீது
கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்!

விஜயவாடா இந்திரகீலாத்ரி மலை மீது கோவில் கொண்டுள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில் சாகம்பரி உற்சவங்கள் தொடங்கின.

வெள்ளிக்கிழமை மேளதாளத்தோடு மங்கள வாத்தியங்களுடன் கொண்டாட்டம் ஆரம்பம் ஆனது. கோவிலையும் அம்மனையும் பலவித காய்கறிகளால் அலங்கரித்தார்கள். மூன்று நாட்கள் சாகம்பரி தேவியாக அம்பாள் தரிசனம் அளிக்கிறாள்.

தினமும் 6000 பேர் பக்தர்கள் அம்மனை தரிசித்து கொள்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள். கனகதுர்கா தரிசனம் டிக்கெட் ஆன்லைன் மூலம் வழங்கும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

sahabari devi
sahabari devi

பக்தர்கள் தலைமுடி சமர்ப்பித்து கொள்வதற்கும் கனகதுர்கா கோவிலில் ஏற்பாடு கள் தொடங்கப்பட்டுவிட்டது. ஒரு மணி நேரத்திற்கு 90 டிக்கெட்டுகள் அதிகாரிகள் விற்கிறார்கள்.

சாகம்பரி தேவி உற்சவ ஏற்பாடுகளை ஆலய ஈவோ எம்வி சுரேஷ்பாபு ஆராய்ந்தார்.

sahabari devi
sahabari devi

தெர்மல் ஸ்கிரீனிங் செய்தபின் மாஸ்க்குகள் அணிந்தவர்களுக்கு மட்டுமே க்யூ வரிசையில் அனுமதி அளிக்கப்படுகிறது.

சாகம்பரி அலங்காரத்தோடு இந்திரகீலாத்ரி மலை அழகாக காட்சியளிக்கிறது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img