விஜயவாடா அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்! இப்படியும் முதியோரை ‘ட்ரீட்’ செய்வார்களா?!

Published:

vijayawada hospital
vijayawada hospital

ஜூன் 24ஆம் தேதி மூச்சு விட முடியாமல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசாங்க புது மருத்துவமனைக்கு சென்ற 62 வயதான தன் கணவர் வசந்த ராவை காணவில்லை என்று அவர் மனைவி தனலட்சுமி மற்றும் உறவினர்கள் வருந்துகிறார்கள்.

அப்போதிலிருந்து மருத்துவமனை சிப்பந்திகளிடம் கேட்டால் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார்கள் என்றும் போலீசாருக்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த செய்தியும் வரவில்லை.

தன் கணவர் எங்கிருக்கிறார். என்ன ஆனார் என்று எனக்கு புரியவில்லை என்று அவர் வருந்துகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மேலும் வசுந்தராவின் சகோதரர் கூட சில நாட்கள் முன்பு தான் மரணமடைந்தார்.

அவருடைய பத்தாம் நாள் காரியம் ஆரம்பமாவதற்கு முன்பே வசந்தராவு ஆயாசம் ஏற்பட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

வசுந்தராவை பரிசோதித்த பிரைவேட் மருத்துவமனை மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அதனால் வசந்தராவும் தனலட்சுமியும் அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கு இருவர் வசுந்தராவை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
vijayawada hospital
vijayawada hospital

தனலட்சுமி வெளியிலேயே இருந்தார். ஆனால் உள்ளே தன் கணவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் நினைத்து மாலை வரை காத்திருந்தார். அவருக்கு யாரும் எந்த விவரமும் கூறவில்லை. அங்கிருந்தவர்களை கேட்டால் சிகிச்சை அளிப்பதாக கூறினார்கள்.

இங்கு அமர வேண்டாம் நாளைக்கு வாருங்கள் என்று கூறியதால் அவர் திரும்ப வீட்டுக்கு சென்றார். மறுநாள் மருத்துவமனைக்குச் சென்றால் வசந்தராவு என்ற மனிதர் யாரும் இங்கே இல்லை என்று செய்தி தெரிவித்தார்கள். அவர் பயந்து கவலையடைந்து கணவருக்காக எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார். அங்கு மருத்துவமனையில் இருப்பவர்களும் எதுவும் கூறவில்லை.

போலீசாரும் எதுவும் கூறவில்லை. தன் கணவரை தேடி கண்டு பிடியுங்கள் என்று அவர் இப்போது பகிரங்கமாக சோசியல் மீடியாவில் தெரிவித்து வருத்தம் அடைந்து வருகிறார். மருத்துவமனை சிப்பந்தியின் அலட்சியம் காரணமாகவே தன் கணவரின் அடையாளம் காணவில்லை என்று அவர் கலங்குகிறார்.

ஆஸ்பத்திரிக்கு சென்ற நாளன்று நிறைய நேரம் அங்கு மருத்துவமனை சிப்பந்தி சரியாக பதிலளிக்கவில்லை. இறுதியில் கெஞ்சிக் கேட்ட பின் தான் தன் கணவரை வீல் சேரில் உட்கார வைத்து அழைத்து சென்றார்கள். அதன்பின் தன் கணவரை காணவில்லை என்று வருந்துகிறார்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

உறவினர் சங்கரநாராயணன் இது தொடர்பாக பேசுகையில் மருத்துவமனையில் தமக்கு செய்தி எதுவும் கூறுவதில்லை என்றும் மாவட்ட கலெக்டர் இது விஷயமாக தலையிட்டு தமக்குரிய நியாயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஒருபுறம் அரசு புது சட்டம் போட்டுள்ளது. முதியவர்கள் தமக்குத்தாமே தனிமைப்படுத்திக் கொள்ள கூடாது. மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் பரிசோதித்து அறிவுரை கூறிய பின் வீட்டில் அதற்குரிய வசதியும் பார்த்துக்கொள்ள மனிதரும் இருந்தால் தான் அங்கு வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் அல்லது மருத்துவமனையில்தான் சேர வேண்டும் என்று புது சட்டம் இயற்றிய வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் கவலை அளிக்கின்றன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img