
சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்த ஒருவன் மெல்லிய பரங்கிக்காயை பார்த்தான். இந்த மெல்லிய கொடி இவ்வளவு பெரிய பழத்தை எப்படி தாங்கும் இதனை இதற்கு கொடுத்த இறைவன் எவ்வளவு கொடூரமாக இருக்க வேண்டும் என்று அவன் நினைத்துக்கொண்டான்.
மேற்கொண்டு நடந்து செல்லும்போது வேப்ப மரத்தைப் பார்த்தான் அதில் சிறிது நேரம் இளைப்பாற எண்ணினான் அதன் நிழலில் படுத்தவன் மேல் நோக்கி மரத்தை பார்த்தவாறு படுத்திருந்தான் வேப்பமரத்தின் சிறிய பழத்தைப் பார்த்ததும் உண்மையில் இறைவன் பைத்தியமாக தான் இருக்க வேண்டும்
பெரிய மரத்திற்கு இவ்வளவு சிறிய பழத்தைக் கொடுத்து இருக்கிறானே என்று நினைத்தான் அவன் சிந்தித்து முடிப்பதற்குள் ஒரு வேப்பம்பழம் அவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது

உடனே அவன் தன் தவறை உணர்ந்தான் இறைவன் இந்த மரத்திற்கு பெரிய பரங்கிக்காயை கொடுத்திருந்தால் என் நிலைமை இப்பொழுது என்னவாயிருக்கும் இந்த மரத்திற்கு ஒரு சிறிய பழத்தையும் மெல்லிய கொடிக்கு பெரிய பரங்கிக்காயையும் கொடுத்ததால் தான் இந்த சிறிய வலியோடு தப்பித்தேன் என்று எண்ணினான்.
அதே போல் ஒரு ராஜாவிற்கு மிகவும் புத்தியுள்ள மந்திரி இருந்தான் அவன் எப்பொழுதும் இறைவன் செய்வது எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிக்கொண்டே இருப்பான்
ஒரு நாள் ராஜா ஏதோ வேலையில் ஈடுபட்டிருக்கும் போது தன் கைகளை வெட்டிக் கொண்டு விட்டதால் வலியால் துடித்துப் போனான் அப்பொழுது ராஜா மந்திரியை அழைத்து இதுவும் நன்மைக்குத்தான் என்று சொல்கிறாயா என்று கேட்டார் ஆம் என்று கூறினான் அந்த மந்திரி உடனே தன் விரல் வெட்டுண்டது நன்மைக்கு என்று கூறிய மந்திரி மீது கோபமுற்று சிறையில் அடைத்தான்
ராஜா வேட்டையாடச் சென்றார் பரிவாரங்களுடன் விலகி வெகுதூரம் பிரிந்து வந்து விட்டதால் ராஜா காட்டில் வழி தவறி சென்று விட்டான் வழியில் பயங்கரமான சில காட்டுவாசிகளை ராஜா சந்திக்க நேர்ந்தது அவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்கு பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தார்கள் ராஜாவை பார்த்ததும் உடனே அவர்கள் அவனை சிறைப் படுத்தி தங்கள் பூசாரியிடம் கொண்டு சென்றார்கள்

அரசனை நன்கு பரிசோதித்து பார்த்த அந்த பூசாரி இவன் பலியிடுவதற்கு தகுதியானவனல்ல இவன் கையில் ஒரு விரல் இல்லை எவ்வித குறைபாடும் இல்லாத முழுமையான ஒருவனைத் தான் நாம் தேவதைக்கு பலியிட வேண்டும் என்று குறிப்பிட்டான்
உடனே அந்த காட்டுவாசிகள் ராஜாவை விடுவித்து விட்டார்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணி அவன் தன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான் மந்திரியை தான் அநியாயமாக சிறையில் அடைத்தது ஞாபகத்திற்கு வந்தது தனது விரலை இழந்தது கூட தன் நன்மைக்குத்தான் என்று கூறிய மந்திரியின் வார்த்தைகளை எண்ணி பார்த்தான் அவன் விரல் இழந்ததால் தானே உயிர் பிழைக்க முடிந்தது என்று நினைத்து ராஜா மந்திரியை சிறையிலிருந்து விடுதலை செய்தான்

அவனிடத்தில் மன்னிப்பும் கேட்டான் சிந்தனையில் ஆழ்ந்த அரசன் மந்திரியைப் பார்த்து நான் உன்னை சிறையில் அடைத் தேன் அதுவும் நன்மைக்குத்தான் என்றாய் எவ்வாறு? என்று கேட்டான்
ஆம் என்று பதில் அளித்த மந்திரி சிறையில் அடைக்கப்படாமலிருந்தால் அந்தக் காட்டில் நான் உங்கள் அருகில் இருந்து இருப்பேன் என் உடலில் எவ்விதக் குறையும் இல்லாததால் அந்த காட்டுவாசிகள் என்னை பிடித்து பலியிட்டு இருப்பார்கள் என்று கூறினான் மந்திரி
ஒருவன் முழு நம்பிக்கையுடன் ஆராய்ந்து பார்த்தானேயானால் இறைவனுடைய படைப்பில் எவ்வித குற்றமும் இல்லை என்பதை அவருடைய செயல்கள் யாவுமே நமது நன்மைக்குத்தான் என்பதையும் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
ஆச்சார்யாள் இவ்வாறு கதையின் மூலம் இறைவன் செய்வது நன்மைக்கே என்று வாழ்க்கையின் போக்கில் செல்வது சால சிறந்ததாகும் என்பதை அறிவுறுத்தினார்கள்.



