அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தடாகோயில் பகுதியில் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை வழங்கப் படும் என்று ஸ்டாலின் உறுதி கூறினார்.
அரவக்குறிச்சி சூலூர் உட்பட நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை நிறைவடைய உள்ள சூழ்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து மு க ஸ்டாலின் இன்று காலை முதல் மாலை 5 மணி வரை தடாகோயில் வெஞ்சமாங் கூடலூர் வேலாயுதம்பாளையம் பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
அரவக்குறிச்சி அருகே உள்ள தடா கோவில் பகுதியில் மு க ஸ்டாலின் பேசுகையில்: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படும். தடாகோயில், நாகம்பள்ளி உட்பட 15 ஊராட்சிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முருங்கை விவசாயிகள் நலன் கருதி குளிர்பதன கிடங்கு உடன் கூடிய வசதி மேற்கொள்ளப்படும்.
அரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் சுமார் 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீட்டு மனை வழங்கப்பட உள்ளது இவ்வாறு தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசிய காணொளி