பெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
pmk-road-roko
pmk-road-roko

சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி வெளியூர்களில் இருந்து வந்த பாமக.,வினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை அடுத்து ரயில் மற்றும் சாலையில் வாகனங்களை மறித்து பாமக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்கள் மீது கல்லெறிந்து அராஜகத்தில் ஈடுபட்டனர். 20% வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் தொடர்பாக சென்னை வந்த பாமகவினர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது.

சென்னை பெருங்களத்தூர் அருகே ஜிஎஸ்டி சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்களை மறித்தும் பாமகவினர் போராட்டம் நடத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.