விஷாலுக்கு வலுக்கும் நெருக்கடி

Published:

நடிகர் விஷால் மீது நெருக்கடி அதிகரித்து வருகிறது.
நடிகர் விஷால் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார்

அளித்துள்ளார். தயாரிப்பாளர், நடிகர் சங்க தேர்தலில் பணம் கொடுத்து விஷால் வெற்றி பெற்றதாக பேஸ்புக்கில் தகவல் பரவி வருகிறது.

பேஸ்புக்கில் வெளியான கருத்துப் பரிமாற்றங்களை அலட்சியமாகக் கருதாமல் விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளார் தேவராஜன்.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் இயக்குனர் சேரனுக்கு ராதாரவி, ராதிகா ஆகியோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.கே. நகரில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இயக்குனர் சேரன் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. விஷாலின் நடவடிக்கையால், திரைத்துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றனர். ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருக்க வேண்டிய சூழல் திரைத்துறைக்கு உண்டு என்று கூறும் அவர்கள், விஷாலின் இத்தகைய நடவடிக்கை நிச்சயம் ஆளும் தரப்புக்கு எதிரான மனநிலை உள்ளவர்களாக திரைத்துறையினரைக் காட்டி விடும் என்று கூறுகின்றனர்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img