இறைதூதர் என்று கூறி பெண்ணிடம் பாலியல் கொடுமை நகை பணம் பறித்த மதபோதகர்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் திருச்சி
matharasa 1 - 2026

இறைத்தூதர் என்று கூறி பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய காமுகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சியில் உள்ள கே.கே நகர் பகுதியை சார்ந்த பெண்மணி வயது 30 இவர் திருச்சி கண்டோமென்ட் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். இது குறித்த புகாரில், ” திருச்சியில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு பகுதியை சார்ந்தவன் பரூக்.

இவன் எனக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக அறிமுகமானான். தன்னை மதபோதகர் என்று கூறி அறிமுகம் செய்த நிலையில், சில வாரங்கள் கழித்து மத ரீதியான வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், தன்னை இறைத்தூதர் என்று கூறி தான் சொல்வதை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மத ரீதியான வகுப்புகள் என்ற பெயரில் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதுமட்டுமல்லாது ரூ.50 இலட்சம் மதிப்புள்ள 80 பவுன் நகைகள், ரூ.10 இலட்சம் ரொக்கம் பணத்தையும் மிரட்டி பெற்றுக்கொண்டார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

இதன்பின்னரும் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். இந்த விஷயத்திற்கு உடந்தையாக பரூக்கின் மனைவி மற்றும் உறவினர் உடந்தையாக உள்ளனர். அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எனது வாழ்க்கையை காப்பாற்றுங்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறைத்தூதர் என்ற பெயரில் அத்துமீறிய காமுகன் பரூக்கை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவனுக்கு உடந்தையாக இருந்த பரூக்கின் மனைவி மற்றும் உறவினரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.