ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் விஷாலை முன்மொழிந்த இருவரின் கையெழுத்து தவறாக இருப்பதாக வேட்புமனு நிராகரிப்பட்ட நிலையில், தற்போது வேட்புமனு ஏற்கப்பட்டு உள்ளது.
ஆடியோ ஆதாரத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னர் விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி சரியான முடிவை அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லது நடப்பதற்கு தடைகள் இருக்கும். எனக்கு எதிராக யார் செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நாளை முதல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடவுள்ளேன் என்று தெரிவித்தார்.



