சீனப் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி நாகையில் இந்து மக்கள் கட்சி பிரசாரம்!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
nagai hmk
nagai hmk

எல்லை தாண்டி அத்துமீறி ஆக்கிரமிக்க துடிப்பதோடு மறைமுகமாக இந்தியாவின் மீது பொருளாதார ரீதியில் யுத்தம் நடத்தும் சீனாவின் திட்டத்தை முறியடிக்க சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் சார்பில் நாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது .

nagai hmk
nagai hmk

சீன தயாரிப்புகளான மொபைல்கள், லேப்டாப்புகள், பிஸ்கட், சாக்லேட், பொம்மைகள், மருந்து மாத்திரைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ரப்பர் பொருட்கள், விவசாய பொருட்கள் என தனது நாட்டு தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்பனை செய்து தினந்தோறும் பல்லாயிரம் கோடிகளை சீனா கொள்ளையடித்துச் செல்கிறது.

சீனப் பொருட்களை வாங்குவதை தவிர்க்க கோரி அவற்றின் பட்டியல் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் ஆறு.பார்த்திபன், ஒன்றிய தலைவர் ஜோதிப்பிள்ளை, நிர்வாகிகள் செல்வம், செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.