கொரோனா பாதிப்பு; சரத்குமாருக்காக பிரார்த்திக்கும் தொண்டர்கள்!

Published:

sarathkumar - 2026

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாருக்கு இன்று ஐதராபாத்தில் வைத்து கொரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டது. இதை அடுத்து அவரது கட்சித் தொண்டர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அக்கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் செங்குளம் கணேசன் வெளியிட்ட அறிக்கையில்…

நமது அன்புத் தலைவர் புரட்சித் திலகம் நாட்டாமை அவர்களுக்கு ஹைதராபாத்தில் இன்று அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தலைவர் அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளது தொண்டர்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம். தலைவர் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப நெல்லை புறநகர் மாவட்டம் சார்பாக நாம் அனைவரும் நமது அன்புத் தலைவர் அவர்களுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் .. என்று செங்குளம் கணேசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

samathuva-makkal-katchi
samathuva-makkal-katchi
ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img