
ஆஸ்திரேலியாவில் உள்ள பூங்கா அருகே இருந்த மைதானம் ஒன்றில் பொது மக்கள் சுற்றி அமர்ந்துள்ளனர். அப்போது அந்த பூங்காவிலுள்ள பெண் பயிற்சியாளர் ஒருவர், கருப்பு நிறம் கொண்ட கிளி ஒன்றை கொண்டு வந்து, அங்கிருந்த மக்களிடம், இந்து இருப்பவர்களில் யாருக்கு இந்த கிளி அருகே வைத்து சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என கேட்டுள்ளார்.

அப்போது, அங்கு அமர்ந்திருந்தவர்களில் பலர் கையை உயர்த்தியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த பெண் ஒருவரை பயிற்சியாளர் தேர்வு செய்தார். இதனையடுத்து அந்த கிளி அங்கிருந்து பறந்து சென்று, அந்த பெண்ணின் கையில் சிறிய காகித துண்டை அளித்து விட்டு மீண்டும் பறந்து பயிற்சியாளரிடம் வந்தது.

அந்த காகிதத்தை பெண் திறந்து படித்தபோது, அதில் யாரோ தனக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார் என்பதை அறிந்தார். இதனையடுத்து அருகில் அவருடன் வந்திருந்த ஆண் நண்பர் ஒருவர், மோதிரம் ஒன்றை அந்த பெண்ணிடம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து திடீரென நடந்த இந்த சம்பவத்தால் இன்ப அதிர்ச்சியில் அவரின் காதலையும் ஏற்றுக் கொண்டார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Congratulations to our guests, Jesse and Erin, who popped the big question in the Crocoseum. Planning that special moment this year? From proposals to elopements, visit https://t.co/EHeDxlUBuK & let the Crikey Crew help you say “I do!”
— Australia Zoo (@AustraliaZoo) January 2, 2021
(Tag anyone who needs a helpful hint💍) pic.twitter.com/tRry7ujaG2