வாய்க்காலில் இறங்கிய அரசு பேருந்து!

சற்றுமுன் தமிழகம்
bus-3
bus-3

அரசு பஸ் ஒன்று திடீரென நிலைதடுமாறி வாய்க்காலுக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலிருந்து சிதம்பரத்திற்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசித்து வரும் குபேந்திரன் ஓட்டி வந்தார். இந்த பேருந்தானது கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி அருகே உள்ள ரெட்டைகுலம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறிய பேருந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்து விட்டது.

இதனால் பேருந்தில் பயணித்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

ஆனால் இந்த விபத்தில் 4 பயணிகள் படுகாயம் அடைந்து விட்டனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், மற்ற மூன்று பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின் கிரேன் மூலம் அரசு பேருந்து மீட்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.