இலக்கைத் தாண்டி விற்பனையில் சாதனை; புத்தாண்டில் டாஸ்மாக்

சற்றுமுன் தமிழகம்

புத்தாண்டை ஒட்டி ரூ.200 கோடிக்கு மதுவிற்பனை செய்ய டாஸ்மாக் நிர்ணயித்த எல்லையைக் கடந்து ரூ. 211 கோடிக்கு விற்பனை ஆனது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டையொட்டி தமிழகத்தில் 211 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மதுக்கடைகள் முடப்பட்டதால், இலக்கு எட்ட முடியவில்லை.  ரூ.180 கோடி அளவில் விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு விலை ஏற்றத்தையும் கடந்து, மது  விற்பனை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் நிர்ணயித்த இலக்கை தாண்டி விற்பனை அதிகரித்துள்ளது.

31-ம் தேதி அன்று ரூ.117 கோடி அளவிலும் ஜனவரி 1-ம்தேதியன்று ரூ.94 கோடி அளவிலும் மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் ரூ.211 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 30 கோடி ரூபாய் அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.