ரஜினி அரசியல் செய்கிறார்; அரசியலுக்கு வரவில்லை!
என்ன புரியவில்லையா?
அவரது ரசிகர்களையும் கட்சி சார்பற்ற மக்களையும் அவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.
அவர் அரசியலுக்கு 1996லேயே வந்துவிட்டேன் என்கிறார்.
கடந்த 20 ஆண்டில் அவரது அரசியல் என்ன?
சுழியம். ஜீரோ. முட்டை.
சரி வராத வந்த மாமணிபோல வந்துவிட்டேன் என்றார். உடனே கட்சி, கொள்கை, கொடி எல்லாம் அறிவிக்கலாமே?
அதுவும் இல்லை.
உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்றதேர்தல் எதிலும் களம் காணப் போவது இல்லை.
மூன்றாண்டு கழித்து வரும் சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு!
பொதுப்படையாக ஆன்மிக அரசியல் என அறிவிப்பு.
ஆப் மூலமாக இயக்கத்தில் இணைய ஏற்பாடு….
புண்ணியவான்களே சிரிப்பு சிரிப்பா வருது…நீங்கள் எப்போதுதான் மக்களை சந்திக்கப் போகிறீர்கள்.
முகநூல் போராளிகள் எல்லாம் ஓட்டுப் போடுவதே அறிது.
சரி ஏன் ரஜினி தமிழகத்துக்கு தேவை?
திமுக செயலிழந்து விட்டது.
தமிழக பாஜகவில் சொல்லிக் கொள்ளும்படியான தலைமை இல்லை.
பன்னீரை நம்பி கடுப்பானதுதான் மிச்சம். அவர் அதிமுகவின் அன்பழகன். சுயமாய் செயல்படும் ஆற்றல் காணல். தமிழகம் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையை வீணாக்கிக் கொண்டார்.
எடப்பாடிக்கு மக்களை வசீகரிக்கும் ஆற்றல் இல்லை.
இந்த நிலையில் செயல்வீரராய் உதயமாகி நிற்கிறார் டிடிவி தினகரன்.
அவரிடம் விரைவில் அதிமுகவின் லகான் போய்விடும். அதிமுக கொடி, ஜெ. முகம், சின்னம் எதுவுமே தேவையில்லை.
செல்வாக்கு மிக்க தலைவர்தான் தேவை. அந்த முகமாக இப்போது தெரிவது தினகரன் தான்.
இத்தகைய சூழலில்தான் ரஜினி களம் காண வருகிறார். ஆனால் அவரது முகம் தாமரையாய் தெரிவது தான் சோகம்.
அதைவிட சோகம் அவர் மக்களை சந்திக்காமல் காலவர்களை தன்னிடத்துக்கு வரச்சொல்லி சந்திக்கிறார். சினிமா வசனம் போல பேசுகிறார். சூராவளி பிரசாரம் செய்ய மாட்டார். அவரது போர் பிரகடனம் 3 ஆண்டு கழித்துக்கான களத்தில்… என்றால்…
பாவம் ரஜினி ரசிகர்கள். இலவு காத்த கிளியாக நிற்கப்போவது நிஜம்.
அவர் வழக்கம் போல அரசியல் செய்கிறார்.
சரி களத்தில்…
தினகரன் – திமுக- அதிமுக பாஜக.
விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அத்தனை தொகுதியிலும் விசில் அடிக்கும் குக்கர்.
ஒரு காலத்தில் கோலாச்சிய காங்கிரஸ் போல, இலை அதிமுக இல்லை அதிமுக ஆகிவிடும்.
ரஜினியின் அறிவிப்பு 2000தில் ஏசு வருகிறார் என்பது போலாகும்.
இது புரிந்தால் இதுவும் புரியும்..பாஜக எப்படி பன்னீர் செல்லம் என்கிற மண்குதிரையை நம்பியதோ அதே போன்றே இப்போது ரஜினி என்ற மாயமானை நம்புகிறது.
வழக்கம் போல ரஜினி தமிழக மக்களை பாபா முத்திரைக் காட்டி கதம் செய்துவிடுவார்.
அப்போது புரியும்.
என்ன?
ரஜினி அரசியல் செய்கிறார்; அரசியலுக்கு வரவில்லை!
கருத்து: எஸ்.ஆர். செந்தில்குமார்



