பஸ் வேலை நிறுத்தம் தொடரும்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Published:

சென்னை:

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

உயர்நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதங்களை திங்கல் அன்று முன்வைப்போம்; எங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

நீதிமன்ற உத்தரவை எதிர்கொள்வோம் என 20 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தபோது… நீதிமன்ற உத்தரவு நகல் இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்கள் தரப்பு கோரிக்கைகளை கேட்காமலேயே முடிவை கூறியுள்ளது.

பேச்சுவார்த்தையின் போதே முதுகுக்குப் பின் ஒப்பந்த வேலைகள் நடைபெற்றன. சில பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. திங்கள் அன்று வழக்கு விசாரணைக்கு வரும் வரை மட்டுமல்ல, எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img