சிறுமிக்கு பாலியல் தொல்லை! திமுக ஒன்றிய நிர்வாகி போக்சோவில் கைது!

Published:

govindaraj-dmk-5
govindaraj-dmk-5

பென்னாகரத்தில் சேர்ந்த திமுக ஒன்றிய நிர்வாகி கோவிந்தராஜ் என்பவர், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 18 வயதுக்கும் உட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து உள்ளது. பதின் பருவத்திலேயே பாதை தவறி இளம் தலைமுறை சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் சேர்ந்த திமுக ஒன்றிய நிர்வாகி கோவிந்தராஜ் என்பவன், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 50 வயது மத்திப்புதக்க பெண் ஒருவர் கணவரை இழந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய மகள் உள்ளார். மாற்றுதிறனாளியான அவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே காட்டு பகுதிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் திரும்பாத நிலையில் அதிர்ச்சியடைந்த அவரது தாய் அப்பகுதிக்கு சென்று பாரத்த போது சுமார் 30 வயது மதிப்புதக்க இளைஞர் ஒருவர் ஓடியுள்ளார்

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

சந்தேகமடைந்த மாணவியின் தாயார் மகளிடம் விசாரித்தபோது அந்த இளைஞர் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அழுதபடி கூறியுள்ளார். இதனையடுத்து அவர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனரான திமுக ஒன்றிய பிரமுகர் கோவிந்தராஜ் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கோவிந்தராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related articles

Recent articles

spot_img