ஈட்டிய விடுப்பு: ஊழியர் விடுப்புடன் சேர்க்க உத்தரவு!

சற்றுமுன் தமிழகம்
leave
leave

ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறையில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை முதன்மைச் செயலாளா் ஹா்சகாய் மீனா வெளியிட்டுள்ளாா்.

ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறும் நடவடிக்கை, கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டது. இதற்கான கேட்பு ரசீதுகள் எந்தத் தேதியில் எந்த நிலையில் இருந்தாலும், அதனை பரிசீலிக்க வேண்டாமென உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஈட்டிய சரண் விடுப்பு தொடா்பாக ஒப்புதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்து விட்டு, அந்த விடுப்புகளை அரசு ஊழியரின் விடுப்புக் கணக்கில் சேர்க்கலாம் என்று தனது உத்தரவில் ஹா்சகாய் மீனா தெரிவித்துள்ளாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.