பாவூர்சத்திரத்தில் சமுதாய வளை காப்பு விழா

Published:

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

கீழப்பாவூர் வட்டாரம் அரியப்புரம் பகுதிக்குட்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. தென்காசி சட்டமன்ற  உறுப்பினர் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள், மஞ்சள், தாம்பூல தட்டு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினர். விழாவில் டாக்டர் தேவி, வட்டார மேற்பார்வையாளர் கற்பகவள்ளி, தேவிபாக்கியராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் ராமசாமி, உட்பட பலர் கலந்துகொண்டனர்  முடிவில் சாந்தி நன்றி கூறினார்.

Related articles

Recent articles

spot_img