
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் மகனுக்கு விநாயகர் கோவிலில் தான் திருமணம் நடைபெற்றது என்று பாஜகவை சேர்ந்த கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இப்போது பாஜக.,வில் இணைந்துள்ளார் கராத்தே தியாகராஜன். இவர், நாத்தாகரான கி.வீரமணியின் மகன் அன்புவுக்கு நடைபெற்ற திருமணம் குறித்து பேசியுள்ளார். அன்புவுக்கு திருமணம் செய்து வைத்தது தாம்தான் என்றும் அது ஒரு விநாயகர் கோவிலில் நடந்தது என்றும் கூறியுள்ளார்.

அன்பு ஒரு மலையாளி பெண்ணை காதலித்தார். ஆனால் கலப்பு திருமணம் கூடாது என்று கி.வீரமணி எதிர்த்தாராம். ஆனால் அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறி கராத்தே தியாகராஜனின் உதவியை நாடினாராம் அன்பு.
அவருடன் புதுச்சேரிக்கு சென்றுள்ளார் கராத்தே தியாகராஜன். ஆனால் அங்கு திருமண செய்ய சட்ட சிக்கல் இருந்ததால், கடலூர் சென்று பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டனர். ஆனால் அங்கு கோவிலில் வைத்து திருமணம் நடத்த குருக்களின் உதவி வேண்டும் என்றாராம்
நாத்திகரின் மகனான அன்பு கோயிலில் வைத்து திருமணம் செய்ய தயங்குவாரோ என்று கராத்தே தியாகராஜன் யோசில்துள்ளார். ஆனால் அதற்கு சம்மதம் என்று கி.வீரமணியின் மகன் கூறியதால் அருகில் இருந்த விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றது என கராத்தே தியாகராஜன் தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
தற்போது கோடிகள் புரளும் தி.க. அறக்கட்டளையை அன்பு தான் நிர்வகித்து வருகிறார். கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர் என்றால் கி.வீரமணி ஏன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட தனது மகனை நியமிக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் இப்போது கேள்வி எழுப்பியுள்ளார்.