பிப்ரவரி 25, 2021, 12:33 காலை வியாழக்கிழமை
More

  தகராறு.. பிரிந்து சென்ற மனைவி தற்கொலை! குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன்!

  Home கிரைம் நியூஸ் தகராறு.. பிரிந்து சென்ற மனைவி தற்கொலை! குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன்!

  தகராறு.. பிரிந்து சென்ற மனைவி தற்கொலை! குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன்!

  vinod-fmly-1
  vinod-fmly-1

  மனைவி பிரிந்து சென்று தற்கொலை செய்து கொண்டதால் கணவன் இரண்டு குழந்தைகளையும், கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த வினோத் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கவின், பிரவீன் என்று இரு மகன்கள் இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு மனைவி கவிதா தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மன உளைச்சலில் இருந்த கவிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  மனைவி இறந்த பிறகு தனது இரண்டு குழந்தைகளையும் வினோத் தான் வசித்த வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

  குழந்தைகளை ஒழுங்காக பராமரிக்க முடியாததால், மனைவி இறந்த சோகத்தில் இருந்ததாலும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். நேற்று காலை வினோத்தின் கதவு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.