மதுரை அனுப்பானடி உச்சி மாகாளியம்மன் ஆலய குடமுழுக்கு

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை
uchimakaliamman-kudamuzhukku
uchimakaliamman-kudamuzhukku

மதுரை : மதுரை அனுப்பானடியில் அமைந்துள்ள அருள்மிகு உச்சி மாகாளியம்மன் ஆலய குடமுழுக்கு திங்கள்கிழமை இன்று காலை நடைபெற்றது.

கோயில் முன்பாக யாகசாலை மண்டபத்தில் விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதற்கால யாகபூஜைகளை, நாட்டுச்சாலை வி. ஜம்புநாதர் சிவாச்சாரியார், மதுரை ஆவின் பால விநாயகர் ஆலய அர்ச்சகர் வி. ஈஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் வேதியர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர்.

இன்று காலை, யாத்ரா தானம், கடம் புறப்பட்டு, கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள், விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.