நெல்லையில் இந்து வியாபாரிகள் நலச் சங்கம் தொடக்கம்!

Published:

hindu-traders-union
hindu-traders-union

நெல்லை மாநகர இந்து வியாபாரிகள் நலச்சங்க தொடக்க விழா நெல்லை டவுன் கீழ ரதவீதி சுப்பையா பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு நெல்லை மாநகர இந்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் காசி என்ற முருகன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் பிரமநாயகம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நெல்லையப்பர் திருக்கோவில் ஓதுவாமூர்த்தி திரு திருமுறை பாடினார். ராயல் சுப்பிரமணியம், பிச்சுமணி , பாட்டா சங்கர் , அருள்ராஜ் , குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசுராஜா, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

இந்து ஜவுளி வியாபாரிகள் மகமை சங்க செயலாளர் சோனா வெங்கடாசலம், ஜெய்ஷா நிறுவன உரிமையாளர் திரவியராஜா
முன்னாள் நகர்மன்ற சேர்மன் வெங்கடாச்சலம், டவுண் வியாபாரிகள் நயன்சிங் சுப்பிரமணியன் கருப்பசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

மத்திய அரசு வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி, இந்து வழக்கறிஞர் முன்னணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜா வேல்ஆறுமுகம் , வழக்கறிஞர் மணிகண்ட மகாதேவன், ஆனந்தராஜ், அழகுராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

டவுன் அண்ணாதுரை முதல் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினார் சக்தி டிரேடர்ஸ் மூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார்.

பழக்கடை மணி மாரியப்பன் ஓம்சக்தி மாரியப்பன் அருள்செல்வம் மாடசாமிபாண்டியன் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சிவா , சுடலை , செல்வராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜசெல்வம் நமசிவாயம் துரைராஜ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர் நெல்லை தெற்கு மண்டல தலைவர் அம்பலவாணன் வடக்கு நகரத் பொதுச்செயலாளர் மாயாண்டி மேலப்பாளையம் மண்டல தலைவர் சங்கர் பேட்டை நகர செயலாளர் சேகர், கணேஷ் தெற்கு நகர பொறுப்பாளர் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img