ஆதார் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் தனி நபர்களின் விவரங்களை வெறும் ரூ.500 வழங்கி தெரிந்து கொள்ள முடிகிறது என்ற அதிர்ச்சித் தகவலை “தி டிரிப்யூன்” பத்திரிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதையடுத்து யுஏடிஏஐ சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் போலீஸாருக்கு உதவ டிரிப்யூன் பத்திரிகை நிர்வாகத்தையும் யுஐடிஏஐ கேட்டுக் கொண்டது. இந்நிலையில், ஆதார் எண்கள் மூலமாக அதுதொடர்பான விவரங்களை காண்பதற்கு சுமார் 5000 அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு வசதியை யுஐடிஏஐ வாபஸ் பெற்றுள்ளது.
Popular Categories



