ஏப்ரல் 12, 2021, 6:29 மணி திங்கட்கிழமை
More

    1கிலோ கேக்குக்கு 1லி பெட்ரோல் இலவசம்! புதிய பேக்கரி கடை அதிரடி ஆஃபர்!

    cake shop - 1

    ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும்.

    திருச்சி மாவட்டம் நீதிமன்றம் அருகே ஹீபர் ரோட்டில், கேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதியதாக ஒரு பேக்கரி திறக்கப்பட்டுள்ளது. இங்கு விற்கப்படும் கேக்குகள் 600 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பலவிதமான கேக்குகள் விற்பனைக்கு உள்ளது.

    இந்நிலையில் ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என பேக்கரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இங்கு பெட்ரோலுக்கான கூப்பனை பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்திற்கு சென்று, அந்த கூப்பனை கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோலை பெற்றுக்கொள்ளலாம்.

    இச்சலுகை குறித்து பேக்கரி உரிமையாளர் சகாயராஜ் அவர்கள் கூறுகையில், இந்த சலுகை அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    ஒரு கிலோ கேக் வாங்கினால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மற்ற இலவசங்களை வழங்கினால் அவர்களுக்கு பெரிய அளவில் பயன் இருக்காது என்றும், பெட்ரோல் விலை தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான இது ஒரு சூசகமான வழி என்றும், இந்த சலுகை ஒரு மாதம் வரை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    3 × 3 =

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,222FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,107FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »