திருமணத்திற்கு மறுத்த 4 வருட காதலன்! இளம்பெண் தற்கொலை!

Published:

lady susid 2 1
lady susid 2 1

4 வருடங்களாக காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷகீன் என்ற மகள் உள்ளார். இவர் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான சண்முகம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சண்முகத்திடம் ஷகீன் கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஷகீன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related articles

Recent articles

spot_img