வயிற்றுக்குள் தங்கம்! வளைத்துப் பிடித்த சுங்கம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
gold
gold

சென்னை விமான நிலையத்தில், ரூ.65.7 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சார்ஜாவில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 42வயதான ராஜா முகமது என்பவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது மலக் குடலில் இருந்து 1.23 கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டது. அதிலிருந்து 1.12 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.52 லட்சம் ஆகும்.

அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது, 7 ஐபோன் 12 ப்ரோ, 12 ஏர்பாட்ஸ் ப்ரோ, 10 ஆப்பிள் கடிகாரங்கள், 12 ஆப்பிள் பவர் அடாப்டர்கள், 6 சாம்சங் கேலக்‌சி கடிகாரங்கள், 4 பெட்டி டன்ஹில் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மதிப்பு ரூ.13.7 லட்சம். அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து மொத்தம் ரூ.65.7 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சுங்கச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.