பரமத்தி வேலூரில் பரபரப்பு! வீட்டுக்குள் பாலியல் தொழில்!

Published:

samunteswari
samunteswari

கிராமத்து வீட்டில் பத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த வீட்டின் உரிமைக்காரப் பெண், புரோக்கர்கள், வாடிக்கையாளர்கள் என 5 பேர்களை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே இருக்கிறது வடக்கு நல்லியம்பாளையம்.

இங்குள்ள ஒரு வீட்டில் 10 க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து தொடர்ந்து பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாரணவீரனுக்கு தொடர் புகார் வந்திருக்கிறது. இதனால், அவர் போலீஸாரை அலெர்ட் செய்தார்.

இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போலீஸாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பரமத்திவேலூர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீஸார் பாலியல் தொழில் நடந்த வீட்டை சுற்றிவளைத்து, திடீர் சோதனை செய்தனர்.

Joseph sankar
Joseph sankar

அப்போது, அந்த வீட்டுக்குள் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த அழைத்து வரப்பட்டிருந்த 10 பெண்களும், 2 ஆண் வாடிக்கையாளர்களும் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த போலீஸார், 10 பெண்களை அவர்களது பாதுகாவலரிடம் ஒப்படைத்தனர்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

மேலும், தனது வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்திய வடக்கு நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பரின் மனைவி சாமுண்டீஸ்வரி (வயது: 53), பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த, திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறை, காமராஜ் மன்ற தெருவைச் சேர்ந்த சங்கர் (வய்து: 45), திருப்பத்தூர் அருகே உள்ள ஆசிரியர் நகர், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது: 55) மற்றும் பாலியல் தொழில் நடந்த வீட்டிற்கு வாடிக்கையாளராக வந்திருந்த இரண்டு பேர் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். மொத்தத்தில், நான்கு ஆண்கள், தனது வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் உள்ளிட்ட 5 பேர்களை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதில், சாமுண்டீஸ்வரியை சேலம் பெண்கள் மத்திய சிறையிலும், சங்கர், ஜோசப், மற்றும் வாடிக்கையாளர்களான இரண்டு ஆண்கள் உட்பட 4 ஆண்களையும், ராசிபுரம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

பரமத்திவேலூரில் பெண்களை வைத்து, கிராமப் பகுதியில் மறைமுகமாக பாலியல் தொழில் செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img