babhu raja
babhu raja

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பாபா பக்ருதீன் என்கிற பாபுராஜா கொரோனாவால் சென்னையில் காலமானார். சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாபுராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சரத்குமார் நடித்த அரசு மற்றும் சத்ரபதி படங்களை தயாரித்தவர் பாபுராஜா.
சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனத்தில் 25 வருடங்கள் தயாரிப்பு நிர்வாகியாகவும், கபாலி படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தவர் பாபுராஜா.

இவர் கடந்த 2003ம் ஆண்டில் அரசு படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். இவர் தனது மகன்களை கதாநாயகன்களாக வைத்து ‘திருப்பதிசாமி குடும்பம்’படத்தை 2017ம் ஆண்டில் தயாரித்தார்.

ஜெ.ஜெ. பிலிம்ஸ் என்று தனியாக நிறுவனம் தொடங்கி நடத்தினாலும், சூப்பர் குட் பிலிஸ்ம் பாபுராஜா என்று சொன்னால்தான் எல்லோருக்கும் என்னை தெரியும் என்று அவரே பெருமையுடன் சொல்லுவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending