tasmac4
tasmac4

அடுத்து இரண்டு நாள்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது பாட்டில்கள் வாங்க குடிகாரர்கள் கூட்டம் அலைமோதியது. முண்டியடித்து மதுபானங்களை வாங்கிச் சென்று சேமித்து வைத்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாளை மே 1 அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அடுத்து இரண்டாம் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கரூரில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் மது குடிப்பவர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

tasmac1
tasmac1

குறிப்பாக கரூர் நகரில் உள்ள பேருந்து நிலையம் ரவுண்டானா, திண்ணப்பா கார்னர், பழைய பேருந்து நிலையம், மக்கள் பாதை, பழைய திண்டுக்கல் ரோடு உள்ளிட்ட பல்வேறு டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இரவு 7 மணிக்குமேல் மது குடியர்கள் கடையை 9 மணிக்கே பூட்டி விடுவார்களே என்று முண்டியடித்துக் கொண்டு மது வாங்கி சென்றனர்.

tasmac3
tasmac3

டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க டாஸ்மாக் கடைகளில் ஏற்கெனவே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்புகள் கட்டி இருந்த போதும் அதிக கூட்டம் காரணமாக அதை யாரும் பொருட்படுத்தாமல், முண்யடித்து கொண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

இதே போல் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடையில் அதிக அளவில் கூட்டம் திரண்டதால் ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வு விதிகள் காற்றில் பறந்தன. மேலும் ஒரு சிலர் நாளைக்கும், நாளை மறுதினமும் மது வேண்டும் என்கின்ற விதத்தில் வீட்டிற்கே அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending