விருதுநகர் பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!

Published:

virudhunagar woman constable kanimuthu died
virudhunagar woman constable kanimuthu died

விருதுநகர் : விருதுநகர் சூலக்கரையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வந்தவர் கனிமுத்து (44). இவர் கணவர் ராஜா, மகள் ராஜஸ்ரீ (11) உடன் சூலக்கரைப் பகுதியில் வசித்து வந்தார். கனிமுத்துவிற்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதனால் மருத்துவ விடுப்பில் சென்ற அவர், வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக, விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்த கனிமுத்து திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த, அந்தப் பகுதியில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் கனிமுத்துவை, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் கனிமுத்து பரிதாபமாக இறந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் காவலர் திடீரென்று இறந்தது காவலர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img