சேவைகள் நிறுத்தம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட SBI!

சற்றுமுன் வணிகம்
SBI bank atm
SBI bank atm

டிஜிட்டல் வங்கி தளங்களை மேம்படுத்துவதன் காரணமாக தங்கள் வங்கியின் டிஜிட்டல் சேவைகள் இன்று பாதிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 22,000 கிளைகள் மற்றும் 57,889 க்கும் மேற்பட்ட ஏடிஎம்களைக் கொண்ட மிகப்பெரிய வலையமைப்பைக் கொண்ட எஸ்பிஐ வங்கி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்.பி.ஐ ” நாங்கள் மே 7, 2021 அன்று 22:15 மணி முதல் 2021 மே 8 ஆம் தேதி 1:45 மணி வரை பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்த காலகட்டத்தில் INB / YONO / YONO Lite / UPI சேவைகள் கிடைக்காது. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதே போல கடந்த மாதம், வங்கியின் டிஜிட்டல் வங்கி தளங்கள், யோனோ, யோனோ லைட், இன்டர்நெட் பேங்கிங், யூனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) உள்ளிட்டவை பராமரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டன. எனினும் இந்த தகவல் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

தற்போது, ​​எஸ்பிஐ டிஜிட்டல் கடன் வழங்கும் தளமான யோனோவின் 35 மில்லியன் பதிவு செய்த பயனர்களைக் கொண்டுள்ளது.

டிசம்பர் 31, 2020 நிலவரப்படி, எஸ்பிஐ 85 மில்லியன் இணைய வங்கி மற்றும் 19 மில்லியன் மொபைல் வங்கி பயனர்களைக் கொண்டிருந்தது. வங்கியின் யுபிஐ பயனர்களின் எண்ணிக்கை டிசம்பர் இறுதியில் 135 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.