முதலமைச்சராக… ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து!

Published:

stalin first signing
stalin first signing

இன்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின், எதில் முதல் கையெழுத்திடுவார் என்று பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. இன்று காலை பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் தலைமைச் செயலகம் வந்த மு.க. ஸ்டாலின், தனது முதல் உத்தரவில் கையெழுத்திட்டார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்…

mk stalin sign
mk stalin sign

ரேசன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக மே மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

நாளை முதல் நகர பேரூந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்.

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்கும்.

stalin first sign2
stalin first sign2
stalin first sign
stalin first sign

100 நாளில் நிறைவேற்றப்படும் கோரிக்கைகளுக்காக தனி இலாகா உருவாக்கி உத்தரவு.

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து உத்தரவு.

மேற்கண்ட 5 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கையெழுத்திட்டார்… என்று குறிப்பிடப் பட்டது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Related articles

Recent articles

spot_img