
ஏன் அணைத்தீர்கள்.?
காக்பிட் உரையாடலில் விமானி கேட்பது பதிவாகி இருக்கிறது.கடந்த மாதம் இதே 12 ஆம் தேதியன்று ஏர் இந்தியாவின் AI-171 விமான விபத்தின் இந்திய புலனாய்வு குழு AAIB யின் அறிக்கை இன்று காலை வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
விமான இஞ்சின்களுக்கான எரிபொருள் செல்லும் சுவிட்ச் அணைத்து வைக்கப்பட்டது குறித்து கொல்லப்பட்டிருந்தது. இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக வெளியாக அறிக்கையில்……. கருப்பு பெட்டியில் பதிவான காக்பிட் அறையின் பதிவான குரலில் தலைமை விமானி அதாவது பஸ்ட் ஆபிசர் இப்படி கேட்பது தெள்ளத்தெளிவாக பதிவாகி இருக்கிறது.
அதற்கு துணை விமானி நான் ஏதும் அணைக்கவில்லை என்கிறார். அதுவும் பதிவாகியுள்ளது…. இந்த உரையாடகளை எல்லாம் நேர நிமிட விநாடிகள் வாரியாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்த விமானம் புதுடெல்லியில் இருந்து AI-423 என்கிற அடையாளத்துடன் அகமதாபாத்திற்கு காலை 10:17 மணிக்கு வந்திருக்கிறது என்பதில் இருந்து நீள்கிறது அவர்களுடைய அறிக்கை.
அங்கு இருந்து லண்டன் செல்ல இந்த விமானத்தை டாக்ஸி வே இடத்தில் கொண்டு சென்றது மதியம் 1:18:38.அது AI 171 எனும் தட இலக்கத்தோடு ரன் வேயில் ஓடி டேக் ஆஃப் ஆன சமயம் மதியம் 1:37.வானில் பறக்க உயர்ந்த சமயம் இந்த சுவிட்ச் ஆப் ஆனது 1:38:48.மீண்டும் அந்த சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது 1:38:58.விமானி மே டே அறிவிப்பு ATC க்கு கொடுத்தது 1::39:05.விமான விபத்து நடந்திருப்பது 1:39:11.அத்தனையும் துல்லியமாக தங்கள் நான்கு பக்க அறிக்கையில் தெளிவாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதன்படி பார்த்தால் அந்த புறப்பட்ட 2 நிமிடம் 11 விநாடிகளில் மொத்தமும் முடிந்துவிட்டது. விமானங்களின் மொத்த மாதிரியும் சேகரித்து அகமதாபாத்தில் உள்ள விமான நிலைய ஹேங்கரில் பத்திரப் படுத்தி வைத்து இருக்கும் படி போயிங் நிறுவனம் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் FAA கேட்டு கொண்டு இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் எந்த ஒரு தவறுகளும் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்தவர்கள்…. அது மொத்தமும் கைப்பற்றி மாதிரிகளை உலகின் பல தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இங்கு மற்றோர் விஷயமும் நேற்றைய தினம் அமெரிக்க FAA வில் விவாதித்து இருக்கிறார்கள். அது இந்த சுவிட்ச் குறித்து கேள்வி ஒன்றை 2018 ஆம் ஆண்டிலேயே எழுப்பி போயிங் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அது பதிவாகியுள்ளது.
அதுவும் தற்சமயம் விசாரிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே இதேபோலான சம்பவம் நடைபெற்று இருப்பதும் தற்சமயம் வெளியாகியுள்ளது. அப்போது அந்த விமானம் வானில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததால் மீண்டும் உடனடியாக சுவிட்ச் சரி செய்யப்பட்டதாக பதிவுகள் இருப்பதாலேயே இந்த சுவிட்ச் குறித்த கேள்வி FAA எழுப்பி இருந்ததாக சொல்கிறார்கள்.கூடவே இந்த விமானம் கடல் மட்டத்திலிருந்து வெறும் 480 உயரம் மட்டுமே முழுவேகத்தில் எழும்பி இருக்கிறது என்பதையும் விமானத்தின் கருப்பு பெட்டி தரவுகள் சொல்லியிருப்பதையும் நேற்றைய அவர்களின் தகவலில் இடம் பெற்றுள்ளது.வட மாநில ஊடகங்களில் இன்று இது தான் பேச்சு பொருள்.
ஏதோவொரு அமானுஷ்யம் இதில் பொதிந்து கிடக்கிறது. வெளிவர பல மாதங்களும் பிடிக்கலாம் போலிருக்கிறது. அதுவரையில் யாருடைய…. எந்த நிறுவனத்துடைய கனவு கோடும் (dream liner). கலைந்து விடாமல் இருந்தால் சரி. பார்க்கலாம்.
- ஜெய் ஹிந்த ஸ்ரீராம்





