
நாக்பூர், ஜூலை 9, 2025 அன்று ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த மோரோபந்த் பிங்கிளே வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள Moropant Pingle: The Architect of Hindu Resurgence புத்தகத்தை வெளியிட்டார்.
மோரோபந்த் பிங்கிளேயின் அவரது அசாதாரண வாழ்க்கையையும் பங்களிப்பையும் பற்றி இந்த புத்தகம் விவரிக்கிறது.
சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த ஸ்வயம்சேவகர்கள் மத்தியில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர், திரு பிங்கிளே அவரது வாழ்க்கையில் இருந்து சுவாரசியமான நிகழ்வுகளைப் பகிர்ந்தார்.
பிங்கிளேயின் வாழ்க்கையில் இருந்து பரவலாக அறியப்படாத சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். இந்த சம்பவங்கள், கடுமையாக உழைத்த ஒரு நிர்வாகியாக மட்டுமில்லாமல், புகழை புன்னகையுடன் தவிர்த்த ஒரு மிகவும் பணிவான மனிதராகவும் அவரை அடையாளப்படுத்தின.
ஒருமுறை விருந்தாவனத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்த ஸ்ரீ மோகன் பாகவத், பிங்கிளே 75 வயதை எட்டிய நாளைப் பற்றி பேசினார். சங்கத்தின் மற்றொரு முக்கிய அதிகாரியான திரு. எச்.வி. ஷேஷாத்ரி, 75 வயதை எட்டியதை கௌரவிக்கும் வகையில் மோரோபந்த் அவர்களுக்கு ஒரு பாரம்பரிய சால்வையை போர்த்தினார். பின்னர் பேசிய பிங்கிளே ஜி, தனது தனித்துவமான நகைச்சுவையுடன் தொடங்கினார்.
அவர் கூறினார், ‘நான் பேசத் தொடங்குவதற்கு முன்பே மக்கள் சிரிக்கிறார்கள். அவர்கள் என்னை தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை என்று அடிக்கடி உணர்கிறேன். நான் வேடிக்கையாக எதுவும் சொல்லாவிட்டாலும், அவர்கள் சிரிக்கிறார்கள்’” என்று கூறியவுடன் அரங்கம் சிரிப்பொலியால் நிரம்பியது. மேலும் பிங்களே அவர்கள் தொடர்கையில் “நான் இறந்தால், மக்கள் முதலில் ஒரு கல்லை எறிந்து நான் உண்மையில் இறந்துவிட்டேனா என்று சோதிப்பார்கள் என்று நினைக்கிறேன்”.
“75 வயதானதற்கு சால்வை பொருத்துவதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியும். இது பெரும்பாலும் ஒருவருக்கு அவர்களது நேரம் முடிந்துவிட்டது, இப்போது ஒதுங்க வேண்டும் என்று மரியாதையாகச் சொல்லும் ஒரு வழியாகும்.” என்று கூறி சிரித்தார், என்று மோரோபந்த் பிங்கிளே பற்றி குறிப்பிட்டார் ஸ்ரீ மோகன் பாகவத்.
தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர், ”பிங்களே அவர்களின் இந்த நகைச்சுவைக்கு பின்னால், பணிவு மற்றும் பற்றின்மை பற்றிய ஆழமான செய்தி இருந்தது. எந்த ஒரு புகழ்ச்சியின் மீதும் உணர்ச்சிப்பூர்வமாக பற்றுதல் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்தார்.
வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அறிஞர்களால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், மோரோபந்த் பிங்கிளே சுதந்திர இந்தியாவில் இந்து கலாச்சார சிந்தனையின் மறுமலர்ச்சியில் எவ்வாறு முக்கிய பங்கு வகித்தார் என்பதை ஆராய்கிறது. திட்ட நிபுணராக அறியப்பட்ட பிங்கிளே, சங்கத்தின் நீண்டகால தொலைநோக்கு மற்றும் விரிவாக்கத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார், இருப்பினும் அவர் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தியதில்லை” என்று பேசினார் மோகன் பாகவத்.
“பின்களேவின் வாழ்க்கை அமைதியான தலைமைத்துவத்திற்கு ஒரு பாடமாகும்,” அவர் ஒருபோதும் புகழைத் தேடவில்லை, ஆனால் அவரது செல்வாக்கு இன்னும் சங்கத்தின் திசையை வடிவமைக்கிறது.” என்று உரையை முடித்தார் ஸ்ரீ மோகன் பாகவத்.
டாக்டர் மோகன் பாகவத்தின் பேச்சானது பல தலைமுறை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு வழிகாட்டியாக இருந்த மோரோபந்த் பிங்கிளே என்ற ஒரு மனிதரின் தனிப்பட்ட தத்துவத்தைப் பற்றிய அரிய கண்ணோட்டங்களை வழங்கின. இந்த நிகழ்வில், பிங்கிளேயின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் சுதந்திர இந்தியாவில், பல்வேறு சித்தாந்தங்கள் மற்றும் சமுதாய பணிகளை ஒருங்கிணைப்பதில் அவர் ஆற்றிய பங்கு குறித்தும் பேசப்பட்டன.இந்த வாழ்க்கை வரலாறு புத்தகம் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் மாதங்களில் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சில ஊடகங்கள், ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள், மோர்பந்த் பிங்களே அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பேசியதில் இருந்து, குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் வெளியிட்டு, தற்கால அரசியல் கண்ணோட்டத்துடன் ஒப்பிட்டு, தற்போது அரசியல் பொறுப்பில் உள்ளவர்களின் வயதுடன் ஒப்பிட்டு, தவறாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன.





