இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா..! மனசை உருக்கிய பெண்மணியின் பேச்சு..!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை நிகழ்ச்சிகள் லைஃப் ஸ்டைல்
hindu kanchi - 2026

இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா.. நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தது..!

காஞ்சிக்கு அருகில் தேவரியம்பாக்கத்திற்கு உட்பட்ட மதுரா லிங்கா புரத்தில் மக்களின் ஆரவாரத்துடனும் ஆநந்தத்துடனும் எங்களின் ஸத்ஸங்கம் நடைபெற்றது..

ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி காஞ்சீ அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி, ஸ்ரீ உ.வே. KB தேவராஜன் ஸ்வாமி, ஸ்ரீ ஸ்ரீவல்லபன் ஸ்வாமி, ஸ்ரீ ப்ர.ப.ஸம்பத்குமார் ஸ்வாமி, ஸ்ரீ வீரராகவன் ஸம்பத் ஸ்வாமி, ஸ்ரீ அகரம் மாங்காடு சேஷாத்ரி ஸ்வாமி , சென்னையிலிருந்து வந்திருந்த திருநாம ஸங்கீர்த்தந குழுவினர் மற்றும் நம் அக்காரக்கனி ஸ்வாமி ஆகியோர் காலை முதல் மாலை வரை லிங்காபுர கிராம மக்களை தங்கள் பேச்சினாலும் பாட்டினாலும் கட்டிப் போட்டிருந்தனர் என்றே சொல்லலாம்..

‘ உண்மையான அன்பு ‘ – அதன் தன்மை, அதன் வீரியம் , அதன் அழகு ..இவற்றை நீங்கள் உணர விரும்பினால்; கிராமங்களுக்குச் செல்லுங்கள் ..ஆம் கிராமங்கள் மட்டுமே அதனை உள்ளபடி உங்களுக்கு உணர்த்தும்..!

எங்கள் நிகழ்ச்சிகளில் தங்கள் மனங்களை தொலைத்திட்ட அம்மக்களின் சார்பாக , தானே வேண்டி விரும்பி தன் கருத்தினைப் பதிவு செய்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் பேச்சு இங்கே…  கேட்பவரை மெய் சிலிர்க்க வைத்த பேச்சு இங்கே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.