அழகிரி ஆதரவாளர்களின் அதிரடி போஸ்டர்கள்; மதுரையில் பரபரப்பு!

Published:

azhagiri poster1
azhagiri poster1

திமுக தலைவராக உள்ள மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதை முன்னிட்டு மதுரையில் முக அழகிரி ஆதரவாளர்கள் அதிரடியாக சில போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்

போஸ்டர்களுக்கு பெயர் பெற்ற மதுரையில் மு க அழகிரி ஆதரவாளர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் வாசகங்களைப் பொரித்து பிரச்சினைகளை கிளப்பி விடுவது வழக்கம் இதனால் போஸ்டர் என்றாலே மதுரை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது

azhagiri poster2
azhagiri poster2

அழகிரி திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், பல்வேறு வகைகளில் போஸ்டர்கள் அடித்து மதுரை நகரெங்கும் ஒட்டி கவனம் ஈர்க்க முனைந்தனர் அவரது ஆதரவாளர்கள்! கடந்த வருடம் தேர்தலுக்கு முன்பு அழகிரி கூட்டிய கூட்டத்தில் அத்தகைய போஸ்டர்களை நினைவூட்டும் வகையில் இனி ஸ்டாலின் தரப்பு வருங்கால முதல்வரே என்று போஸ்டர் அடித்து எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டியது தான்! எப்போதும் அதையே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! அதென்ன வருங்கால முதல்வரே! ஸ்டாலின் முதலமைச்சராக மாட்டார்! என்னுடைய ஆதரவாளர்கள் அவரை முதலமைச்சராக விட மாட்டார்கள்! என்றெல்லாம் ஆதரவாளர்கள் மத்தியில் உசுப்பேத்தி விட்டார் அழகிரி.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?
azhagiri poster3
azhagiri poster3

இந்நிலையில் தற்போது ஸ்டாலின் முதல்வரானதை அடுத்து அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் முடிச்சு போட்டு போஸ்டர்கள் அடித்து ஒட்டி வருகின்றனர். தம்பி வா தலைமை ஏற்க வா என்ற வாசகங்களுடன் அழகிரி ஸ்டாலினை அழைப்பது போன்று ஒரு போஸ்டர், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்! தலைமை ஏற்க வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி நன்றி! என்று இன்னொரு போஸ்டரும், இணைந்த இதயங்களே முதல்வராக பதவி ஏற்கும் தமிழகத்தின் நல்லாட்சி நாயகர் தளபதியார் அவர்களுக்கு அஞ்சாநெஞ்சன் அவர்களின் அன்புத் தம்பிகளின் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு ஒரு போஸ்டரும் என மதுரை நகர்களில் அங்கங்கே ஒட்டப்பட்டிருக்கின்றன~!

Related articles

Recent articles

spot_img